Monday, March 23, 2009

அம்மாவின் முகமாகவும் இருக்கலாம்

ஏகாந்த பெருவெளியில் தனிமையின்
இரவினில் வருகிறாள்
பருத்த புட்டங்களையும் கொழுத்த முலைகளையும்
கொண்ட மோகப்பெண்

விரைப்பேறும் சயனத்தினில் அங்கங்களில்
முகம் புதைத்து கலவி யாத்திரையில்
மிருகமாய் தொடங்கிட
வளையல்கள் உடைத்து நகங்களால் கீறி
புணர்கிறாள் என்னை முகங்களை மாற்றி

சொட்டாய் துளிர்த்து பீறிட்டு முடிகையில்
விழிப்புத் தட்டுகிறது
ஆழ்மன உணர்வில் மாறிய முகங்களில்
பார்த்தது

அம்மாவின் முகமாகவும் இருக்கலாம்

கென்

5 comments:

பாலு மணிமாறன் said...

கனவுகளின் ஆழத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது ஒரு நதி வெள்ளமாய் பெருக்கெடுத்து. அதன் இழுப்பில் ஓடி வருகின்றன ஓராயிரம் பொருட்கள். எப்போதும் அடையாளம் காணும் முன்பு அடித்துச் செல்லப்படும் பொருள்கள். பல கனவுகள், வீசப்பட்ட வலையில் ஏதும் மாட்டாத மீனவனின் ஏமாற்றத்தோடு விழித்துக் கொள்கின்றன. எல்லாம் அகப்பட்டது போலவும், ஏதுமே அகப்படாது போலவும் இருக்கும் இந்தக் கனவுகள், துக்கத்தின் அடர்த்தி நிறைந்தவை.

சில இரவுகளில் காமம் மிதந்து ஒதுங்கும் கரையாகும் கனவுகள். ஒவ்வொரு நாளும் உயிர் சுமந்து ஓடும் ஒரு நதி.

Anonymous said...

பிறந்தது முதல் சமூகத்தின் பிடியில் சிக்கும்வரை ஒரு குழந்தையின் அகவளர்ச்சியில் தாய்க்குப் பெரும் பங்குண்டு. அவள்தான் முதலில் ஒரு குழந்தையின் வசீகரம். அந்தக் குழ்ந்தை வளர வளர அதன் தாய் மேல்தான் ஈர்ப்பும் ஆசையும் கொள்கிறது. ஒரு பக்குவம் வரும்வரை, சமூகத்தின் அற போதனையில் சிக்கும்வரை, தாய் குறித்தோ, அல்லது தாய் என்பவளின் நிலை குறித்தோ அந்தக் குழந்தை அறிந்திருக்காது. மெல்ல மெல்ல இந்தச் சமூகம்தான் தாய் ஒரு எதிர்பால் மட்டுமல்ல உன்னை ஈன்றெடுத்தவள், தெய்வத்திற்குச் சமம் என்று தாய் மீதான அவனது புரிதலை விரிவாக்கி ஒரு பெரும் அடையாளத்திற்குள் கொண்டு வருகிறது.

ஆதலால் தாய் என்பவள் நமது பால்ய காலத்து கனவுகளின் எந்தவித அடையாளமும் இல்லாத வசீகரமான பெண். என்பது போல கனவில் நமது சுயமோ இருப்போ வெளிப்படாத தருணத்தில் அந்தப் பால்ய காலத்து மனநிலைகளுக்கு திடீர் உருவம் கிடைக்கும்போது, அது அப்படித்தான் உருவமற்ற உருவத்துடன் என்கிற பெரும்வெளியில் அம்மாவைக் கொண்டு வருகிறது

ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

உளவியலில் இதைத் தான் இடிபஸ் காம்ப்ளெக்ஸ் என்கிறார்கள்.

தமிழ்பாலா said...

ஒரு மன நோயாளி கவிதை எழுதியது போலவே அருவருப்பான வார்த்தைகளைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே எழுதியது போலவே இருக்கிறது எந்த விஷயத்தையும் நாசூக்காக சங்ககாலம் முதல் கண்ணதாசன் வரை இருந்த ஒரு இலக்கிய நல்ல பாதையை சீரழிக்க ஒரு பாலியல் கதை சொல்வது போல சிலர் திரண்டு இருக்கிறார்கள் எதையும் மறைத்து சொல்வது நம் தமிழர் மரபு எதையும் பகிரங்கமாக சொல்வது நமது பண்பாடு அல்ல ,அது நாகரீகமும் அல்ல , நீங்கள் அந்த அநாகரீகவழி
தனில் செல்பவரா?என்பது எனக்குத் தெரியவில்லை ஏதோ நவீனம் என்றுபிற்போக்காய் பிதற்றும் வழியில் செல்பவரா என்று எனக்குத் தெரியவில்லை!உண்மையிலேயே உங்களின் எழுத்து எனக்குப் புரியவில்லை.இன்னும நான் நிறைய படிக்கவேண்டி இருக்கிறதோ என்னமோ?

கவிதையும்-புரிதலும் said...

நம் பண்பாடு எந்தச் சிதைவும் இன்றி காலம் காலமாக மிக நேர்த்தியாகத்தான் வந்து சேர்கிறதோ? பண்பாட்டை சமூக வாழ்வையும் அதன் துயரங்களையும் வலிகளையும் ஆழ்மன பிரக்ஞையையும் சொல்லக்கூடிய கண்ணாடியாக மட்டுமே இருக்க முடியுமே தவிர, தாங்கள் சொல்வது போல அது ஒழுக்கப் பிரதி மட்டும் அல்ல.

அந்தக் கவிதையை நன்றாக வாசியுங்கள், அதில் பலவகையான மனித உளவியல்களின் யதார்த்தமும் மன அமைப்பும் இருக்கும். எல்லாவற்றையும் ஒழுக்கம் சார்ந்து மட்டுமேதான் பார்ப்பீர்களோ?