Friday, December 3, 2010

கவிதை (தோழி)

ஆழ்ந்த‌ உற‌க்க‌த்தில்
க‌ன‌வு என்னை
குளிய‌ல‌றையை நோக்கி
அழைத்துச் சென்ற‌து.

ப‌ள‌ப‌ள‌க்கும் கண்ணாடியில்
அன்று குளித்த‌வ‌ர்க‌ளின்
நிர்வாண‌ம்
காட்சிக‌ளாக‌த் தோன்றி
ம‌றைந்தன‌.

ஒரு ச‌ம‌ய‌ம்
இதே க‌ண்ணாடியை
உற்றுப் பார்க்கையில்
த‌ம்பி
சுய‌ இன்ப‌ம் கொண்ட‌தையும்

ஐந்து குழ‌ந்தைக‌ளுக்குப்
பிற‌கு
கோடுக‌ள் நிர‌ம்பி
ஊதிப்பெருத்த‌
அம்மாவின் வ‌யிற்றையும்

திரும்ப‌த் திரும்ப‌ த‌ன்னை
வ‌சீக‌ர‌மாக்கும்
மீசையில் க‌ருப்பு மை பூசும்
அப்பாவையும்

பார்க்க‌ நேர்ந்துவிட்ட‌து

நான் ப‌ய‌ந்த‌து போல‌வே
எல்லா நிர்வாண‌த்தையும்

ஆக்கம்: தோழி(மலேசியா)

நன்றி: வல்லினம்( செப்டம்பர் 2009)

மீண்டும் கவிதைக்கான புரிதல் தொடங்குகிறது

கடந்த வருடம் நான், பாண்டித்துரை, ஜெயந்தி சங்கர், ரிஷான் செரிப் போன்றவர்கள் இணைந்து கவிதைக்கான புரிதல்களையும் விவாதத்தையும் முன்னெடுக்கலாம் எனத் திட்டமிட்டு கொண்டு வந்த இந்த “கவிதைக்கான உரையாடல் – புரிதல் – விவாதம்” வலைப்பக்கம் மீண்டும் தொடங்கவிருக்கிறது.

சிங்கப்பூரில் நிறைய வாசகர்கள் இந்த வலைப்பூ பக்கம் வந்துபோவதாகவும் அறிகிறேன். ஆகையால் அனைவரும் விவாதத்தில் கலந்துகொண்டு ஒரு வாசகப் புரிதலை நோக்கி நகரலாம்.

அன்புடன்

ஆசிரியர்

Monday, March 23, 2009

அம்மாவின் முகமாகவும் இருக்கலாம்

ஏகாந்த பெருவெளியில் தனிமையின்
இரவினில் வருகிறாள்
பருத்த புட்டங்களையும் கொழுத்த முலைகளையும்
கொண்ட மோகப்பெண்

விரைப்பேறும் சயனத்தினில் அங்கங்களில்
முகம் புதைத்து கலவி யாத்திரையில்
மிருகமாய் தொடங்கிட
வளையல்கள் உடைத்து நகங்களால் கீறி
புணர்கிறாள் என்னை முகங்களை மாற்றி

சொட்டாய் துளிர்த்து பீறிட்டு முடிகையில்
விழிப்புத் தட்டுகிறது
ஆழ்மன உணர்வில் மாறிய முகங்களில்
பார்த்தது

அம்மாவின் முகமாகவும் இருக்கலாம்

கென்